Saturday, November 29, 2014


உத்தரப் பிரதேச மாநிலம், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வளாகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் ராஜா மகேந்திர பிரதாப்பின் பிறந்த தினத்தைக் கொண்டாட பாஜக முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜமசீர் உத்தின் ஷா கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், “சில சக்திகள் தங்கள் திட்டத்தை முன்னெடுத்துச் சென்றால், பல்கலைக்கழக வளாகத்தில் வகுப்பு மோதல் ஏற்படக் கூடும்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஏற்படக் கூடிய பின்விளைவுகள் குறித்து பகுஜன் சமாஜ், சமாஜவாதி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கவலை தெரிவித்துள்ளன. ராஜா மகேந்திர பிரதாப், அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் ஆவார்.

அவரது குடும்பத்தினர் இந்தப் பல்கலைக்கழகத்தின் நிறுவனரான சையது அகமது கானுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தனர்.
அவரது பிறந்த தினத்தை அலிகர் பல்கலைக்கழக வளாகத்தில் அடுத்த திங்கள்கிழமை கொண்டாட பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

0 comments:

Post a Comment