Friday, December 19, 2014

அஸ்ஸலாமு அலைக்கும்.(வரஹ்)......

கடந்த டிசம்பர் 2ம் தேதி துபாய் ஜாபில் பார்க்கில் வி.களத்தூர் சங்கமம் 2015 நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதில் 25 சங்கமம் விழா கமிட்டி உறுப்பினர்கள் தேர்ந்து எடுக்கப் பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று (19-12-2014) இரவு 7 மணியளவில் துபாய் பிஸ்மில்லா ரூம் மாடியில் சங்கமம் விழா கமிட்டி நிர்வாகிகள் இந்த வருடம் சங்கமத்தை எவ்வாறு சிறப்பாக நடத்துவது என்பது பற்றி ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

அதில் வரும்2015 பிப்ரவரி 6ம் தேதி வெள்ளிக்கிழமை சங்கமம் நிகழ்ச்சி நடத்த ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப் பட்டது.

மேலும் 25 சங்கம நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்க்கு தனி தனி பொறுப்புகள் வழங்கப்பட்டன.

சங்கமம் நடக்கும் இடம் இன்னும் முடிவாக வில்லை.இன்ஷா அல்லாஹ் நல்ல அறிவிப்புகள் முறைப்படி விரைவில் வெளிவரும்..

இப்படிக்கு..
S.அபு சாலிஹ்.
S.பைஜுர் ரஹ்மான்.
- வி.களத்தூர் சங்கம தகவல் தொடர்பு



0 comments:

Post a Comment