Saturday, December 20, 2014

மதமாற்றம் விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவாக தெரிவிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் தனியார் கல்லூரி விழாவில் கலந்து கொண்ட கேஜ்ரிவாலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த கேஜ்ரிவால், “ஆட்சிக்கு வரும் முன்னர் பாஜக, தேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வோம் என கூறி மக்களிடம் வாக்குகளை பெற்றனர். ஆறு மாதம் கடந்து விட்டது.

என்ன செய்தார்கள் இவர்கள். லவ் ஜிகாத் பற்றி பேசுகிறார்கள். கட்டாய மதமாற்றம் நடந்தேறுகின்றன. டெல்லியில் மத அடிப்படையில் மோதல்கள் நடக்கின்றன.

இப்படித்தான் நடந்து கொள்வோம் என முன்னரே கூறியிருந்தால் அதற்கேற்றவாறு மக்கள் வாக்களித்திருப்பார்கள் அல்லவா?
மதமாற்ற விவகாரத்தில் மத்திய அரசு நிலைப்பாடு என்ன என்பதை இதுவரை தெரிவிக்கவில்லை.

பிரதமர் இதை தெளிவுபடுத்த வேண்டும். அதன்பிறகே ஆம் ஆத்மி கட்சி இவ்விவகாரத்தில் தனது கருத்தை தெரிவிக்கும்” என கூறினார்.

0 comments:

Post a Comment