Thursday, December 11, 2014

துபை, டிச.11
.
இருநூறுக்கும் மேற் பட்ட மருத்துவ மூலிகை களின் சாறு பிழிந்து, அதனை `மை’ ஆக்கி , திருக் குர்ஆன் முழுவதிலுமுள்ள அரபி வாசகங்கள் பொறிக் கப்பட்ட நூதனமான குர்ஆன் வெளியீட்டு விழா  துபையில் நடந்தது.
.
துருக்கியைச் சேர்ந்த யுனானி மருத்துவர் ஹம்தி தாஹிர் என்பவர் 1957 முதல் 1979 முடிய 23 ஆண்டுகள் முயற்சி செய்து இருநூறுக் கும் மேற்பட்ட மூலிகைகளி லிருந்து சாறு எடுத்துள்ளார்.அந்த மூலிகை குழம்பை பயன்படுத்தி அரபி மொழி குர்ஆன் எழுதப்பட்டிருக் கிறது.
.
ஹத்தம்’ என்னும் கலை மற்றும் கைவண்ண நிறுவனம் இந்த அரிய சாதனையை நிகழ்த்தியிருக் கிறது.யுனானி மருத்துவ முறைப்படி இந்த மூலிகை சாறு தயாரிக்கப்பட்டுள் ளது. இந்த மூலிகை சாறு கொண்டு எழுதப்பட்டுள்ள குர்ஆன் 606 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது. 
இதன் எடை ஏழரை கிலோ ஆகும்.குர்ஆன் முழுவதும் கை வண்ணத்தால் எழுதப்பட் டுள்ளது. அச்சுக்கோர்ப்பு மற்றும் அச்சு எந்திரம் எதுவும் பயன்படுத்தப்பட வில்லை. ஹத்தம் கலை மற்றும் கை வண்ண நிறுவனத்திற்கு மார்க்க விஷயங்களில் ஆலோசகராக இருக்கும் அப்துல் அஜீஸ் பின் ஹசன் குறிப்பிடுவதாவது-
.
இந்த மூலிகை சாறு கொண்டு கை வண்ணத்தால் எழுதப்பட்டுள்ள குர்ஆன் வசனங் களை ஓதும் போது, ஓதக் கூடியவர் தனது விரல் களை எழுத்தின் மீது வைத்து ஓதினால் அந்த எழுத்தில் உள்ள மூலிகை சாற்றின் துகள்கள் படிப்ப வர்களின் கை விரல்களில் உள்ள நகக் கண்கள் மூலமாக உடலுக்குள் சென்று உடலில் உள்ள வியாதிகளை குணமாக் குகிறது’’
 என்று தனது அறிக்கை மூலம் தெரிவித்திருக்கிறார்.
.
திருக்குர்ஆனுக்கு “அல் ஷிபா – நோய் நிவாரணிஎன்றும் ஒரு பெயர் இருக்கிறது. உடல் நோயை போக்கும் திருக்குர்ஆன் மனித உள் ளங்களில் உள்ள பிணி களுக் கும் நிவாரணி என்றும் குர் ஆன் கூறுகிறது.
1400 ஆண்டு காலமாக கூறப்பட்டு வரும் இறை வசனங்களின் மகிமையை துபையில் வெளியிடப்பட்டுள்ள – மூலிகை சாறு கொண்டு எழுதப் பட்டுள்ள குர்ஆன் இன்று பூரணப் படுத்தியிருக்கிறது என்று மார்க்க அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
.
நன்றி: மணிச்சுடர்

0 comments:

Post a Comment