Friday, December 26, 2014

சிகரெட் பிடிப்பது உடல் நலத்திற்கு கேடு என்று கூறி கேட்டிருக்கின்றோம். ஆனால் சிகரெட் உடலுக்கு நல்லது என்று ஆய்வில் கண்டுபிடித்துள்ளனர்.

சிகரெட் பிடிப்பவர்கள், அதன் சாம்பலை கீழே தட்டி விடுவது வழக்கம். ஆனால், அந்த சாம்பல், குடிதண்ணீரில் உள்ள விஷத்தன்மையை அழிக்கக்கூடியது என, விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக, விஞ்ஞானிகள் கூறியுள்ளதாவது:

சீனா, ஹங்கேரி மற்றும் மெக்சிகோ போன்ற நாடுகளில் எல்லாம், நிலத்தடி நீரில், ஆர்செனிக் என்ற நச்சுத்தன்மை உடைய மூலப் பொருள் அதிக அளவில் கலந்துள்ளது.

இந்த நச்சுப்பொருள் கலந்த தண்ணீரை குடிப்பதால், தோல் நிறம் மாறுதல், வயிற்று வலி, பக்கவாதம் உட்பட, பலவிதமான உடல் நலக்கோளாறுகள் ஏற்படும்.

இந்த ஆர்செனிக் நச்சுப் பொருளை தண்ணீரிலிருந்து அகற்றுவதற்கான தொழில்நுட்பம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளது.

ஆனால், அது செலவு அதிகம் நிறைந்தது. மேலும், வளர்ந்து வரும் பகுதிகள் மற்றும் கிராமப்புறங்களில், இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது என்பது, நடைமுறைக்கு ஏற்றதல்ல.

அதேநேரத்தில், இயற்கையான கழிவுகளாக கருதப்படும், வாழைப்பழ தோல் மற்றும் நெல் உமி போன்றவற்றை பயன்படுத்தி, தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக் நச்சுப் பொருளை அகற்றலாம் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. ஆனாலும், அது பெரிய அளவில் பயன்பாட்டில் இல்லை.

தற்போது, சிகரெட் சாம்பலையும், தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக்கை அகற்ற பயன்படுத்தலாம். சிகரெட் சாம்பலில் உள்ள அலுமினியம் ஆக்ஸைடு, இதற்கு பெரிய அளவில் பயன்படும்.

மேலும் இதற்கு ஆகும் செலவு மிகவும் குறைவானது. இம்முறையை பயன்படுத்தி, தண்ணீரில் கலந்துள்ள ஆர்செனிக், 96 சதவீதம் குறைக்கலாம். அதனால், உலக சுகாதார அமைப்பு கூறியுள்ள தரத்தில், மக்களுக்கு குடிதண்ணீரை வழங்க இயலும்.

பொது இடங்களில், சிகரெட் பிடிக்க அனுமதிப்பதன் மூலம், சிகரெட் சாம்பலை சேகரித்து, அதனை, தண்ணீரை சுத்தப்படுத்த பயன்படுத்த பயன்படுத்தலாம். என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0 comments:

Post a Comment