பெரம்பலூர், டிச27: பெரம்பலூரில் மாணவனின் தற்கொலைக்கு காரணமான, தனியார் பள்ளியின் ஆசிரியரை, போலீஸார் நேற்று கைது செய்தனர். கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்தவர் ராமநாதனின், 16 வயது மகன், பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி, பதினென்றாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த, 22ம் தேதி மாலை உணவு இடைவேளையில், பள்ளியிலிருந்து விடுதிக்கு சென்றவர், உணவு அருந்தும் அறைக்கு செல்லாமல், தன் அறைக்கு சென்றார்.அறை கதவை உள்பக்கமாக தாழிட்டு, அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரம்பலூர் போலீஸார், மாணவனின் உடலை மீட்டு விசாரித்தனர்.மாணவனின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி, பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்ய, பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து, திருச்சி அரசு மருத்துவமனைக்கு, உடல் கொண்டு செல்லப்பட்டு, அங்கு பிரேத பரிசோதனை செய்ய முயற்சித்தபோது, அவரது பெற்றோர், உறவினர்கள் உள்ளிட்டோர் மாணவனின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பிரச்னையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி., சோனல்சந்த்ரா, திருச்சி மாவட்ட போலீஸ் எஸ்.பி., ராஜேஸ்வரி ஆகியோர், மாணவனின் பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் ,பெரம்பலூர் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பள்ளி ஆசிரியரான, குன்னத்தை சேர்ந்த பொன்னுசாமி மகன் ஆசைத்தம்பி,32, அடித்ததால் மனமுடைந்த மாணவன், தற்கொலை செய்துகொண்டதாக தெரியவந்தது.
இதையடுத்து, ஆசிரியர் ஆசைத்தம்பியை, பெரம்பலூர் போலீஸார் நேற்று இரவு கைது செய்தனர்.

0 comments:
Post a Comment