Saturday, December 20, 2014

ராஜஸ்தான் மாநிலத்தில் மொபைல் போன் ஒன்று சார்ஜரில் இருக்கும்போது அதனை பயன்படுத்தியதால் திடீரென்று அதன் பேட்டரி வெடித்தது. இந்த சம்பவத்தில் 24 வயது வாலிபர் ஒருவர் பலியானார்.

ராஜஸ்தான் மாநிலம் நைன்வா காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோர்மா கிராமத்தை சேர்ந்தவர் ராஜுலால் குர்ஜார். இவர் தனது மொபைல் போன் ஒன்றை சார்ஜ் செய்வதற்காக அதனை மின் இணைப்பில் வைத்திருந்தார். அந்த நிலையிலேயே அதனை எடுத்து அவர் பயன்படுத்தியுள்ளார்.

திடீரென மொபைல் போனின் பேட்டரி அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அவரது மார்பு மற்றும் கை பகுதிகளில் காயம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக அவர் மயக்கமான நிலையிலேயே கிராமத்திலுள்ள சமுதாய சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக அறிவித்துள்ளனர்.
அவரது உடலை பரிசோதித்த மருத்துவர் சமந்தர் லால் மீனா மார்பு மற்றும் கைகளில் கடுமையான தீ காயங்கள் ஏற்பட்டு இருந்ததாக கூறியுள்ளார்.
 
மின்சார அதிர்ச்சி மற்றும் தீ காயங்களால் வாலிபர் இறந்து உள்ளதாக மீனா கூறியுள்ளார். இது தொடர்பாக நைன்வா போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

Post a Comment