பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா முன்னிலையில் நடிகர் நெப்போலியன் பாஜக கட்சியில் இணைகிறார்.
நடிகர் நெப்போலியன் தி.மு.க.வில் பல்வேறு பதவிகளை வகித்தவர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று மத்திய மந்திரியாகவும் பணியாற்றினார்.
தி.மு.க.வில் செல்வாக்குடன் இருந்த நெப்போலியன் அழகிரி ஆதரவாளராக செயல்பட்டதால் கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். இதனால் கட்சிப்பணிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
இந்நிலையில் பா.ஜனதாவில் சேரும் முடிவை அவர் எடுத்துள்ளார். பா.ஜனதா தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார்.
நாளை அவரை நேரில் சந்தித்து நெப்போலியன் பா.ஜனதா கட்சியில் சேருகிறார். நெப்போலியனுடன் அவரது ரசிகர் மன்ற மாநில தலைவர் கவுரிசங்கர், செயலாளர் மாந்துறை ஜெயராமன், பொருளாளர் சீதாராமன், துணை தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் பா.ஜனதாவில் சேருகிறார்கள்.
பொங்கலூர் தொகுதி முன்னாள் தி.மு.க எம்.எல்.ஏ. மணியும் பா.ஜனதாவில் இணைகிறார். சினிமா இசை அமைப்பாளர் கங்கை அமரனும் பா.ஜனதாவில் சேருகிறார்.
நேற்று மாலையில் கட்சி அலுவலகத்துக்கு சென்று தமிழக பொறுப்பாளர் முரளிதரராவ், மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் ஆகியோரை சந்தித்து கட்சியில் சேர தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இன்று மாலையில் அமித்ஷா முன்னிலையில் அவர் பா.ஜனதாவில் இணைகிறார். இதே போல் நடிகர் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரும் இன்று அமித்ஷா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைகிறார்.
இது சமூக ஆர்வலர்கள் மத்தியில் தமிழத்தில் இது போன்ற சூழ்ச்சி அரசியல்கள் பெரியார் பிறந்த மண்ணில் மதவாத சக்திக்கு ஒருபோதும் இடம் கொடுக்காது என்று கூறுகிறார்கள்
இனியும் இது பெரியார் மண் என வீண் பெருமை பேசாமல்
ReplyDeleteதமிழினமே இந்த பாசிச கும்பல்களுக்கு எதிராக அணி திரண்டு களப்பணியாற்ற வேண்டும்.!