
வி.களத்தூர் கிழக்கு சின்னத் தெரு(துறைப்பாடு அருகே) மூணு மாடி வீடு மர்ஹும் ஹாஜி R.M.முஹம்மது சுல்தான் அவர்களின் மனைவி ஹாஜியா உம்முசல்மாபீவி (95) அவர்கள் மி்ல்லத்நகரில் நேற்று ( 04-12-2014 ) இரவு சுமார் 11 மணியளவில் வபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹி ராஜியுன்.
இவருக்கு முல்லா லியாக்கத்அலி, ஜாபர் அலி ஆகிய இருமகன்களும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர். ஜனசா 2வது மகள் ஹைருன்னிஸா அவர்களின் இல்லத்தில் வைக்கபட்டுள்ளது.
இன்று ( 05-12-2014 ) அஸர் தொழுகைக்கு பிறகு மைய்யத் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது.
(அம்மையாரின் மஃபிரத்திற்காக துஆ செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்).
எல்லாம் வல்ல அல்லாஹ் அம்மையாரின் குற்றங்களை மன்னித்து “ஜன்னதுல் பிர்தௌஸ்” என்ற சுவர்க்கத்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன் அன்னாரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவேண்டும் என வல்ல இறைவனிடம் பிராத்தனை செய்கிறோம்.
0 comments:
Post a Comment