Friday, December 5, 2014

புதுடில்லி: பேனாவில் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட் புத்தகங்கள், வரும் 2015ம் ஆண்டு, நவ., 24ம் தேதிக்கு பின் செல்லாது என, மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வி.கே.சிங், ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

அவர், மேலும் கூறியதாவது: நாட்டில், கையால் எழுதப்பட்ட, 2.86 லட்சம் பாஸ்போர்ட் புத்தகங்கள் புழக்கத்தில் உள்ளன. கணினி மூலம் அச்சிடப்படாத, அதாவது கையால் எழுதப்பட்ட பழைய பாஸ்போர்ட்டுகளின் பயன்பாட்டிற்கு, சர்வதேச அளவில், அடுத்த ஆண்டு நவ., 24 வரை, சர்வதேச விமான போக்குவரத்து கழகம், ‘கெடு’ விதித்துள்ளது.

அதன்பின், அந்த பாஸ்போர்ட்டுக்கு, வெளிநாடுகள் விசா வழங்காத நிலை ஏற்படலாம். இந்தியாவில், 1990களின் மத்தியில் வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டுகள், 20 ஆண்டுகள் செல்லத்தக்கதாக இருக்கும் என்பதால், அவற்றை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.இவ்வாறு, அவர் கூறினார்.

0 comments:

Post a Comment