ஆக்ரா: செல்பி மோகத்தில், ஓடும் ரயில் முன்பு படம் எடுக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் ரயில் மோதி உயிரிழந்தனர். சமூக வலைத்தளமான பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்அப் போன்றவை இன்றைய இளைஞர்களை ஆட்டி படைத்து வருகின்றன.
கையில் செல்போனை வைத்துக் கொண்டு மெசேஜ்களை தட்டி விடுவது, உடனடியாக ஸ்டேட்டஸ் கொடுப்பது என இந்த மோகத்தின் ஒரு பகுதியாக செல்பி எனப்படும் தன்னைத் தானே புகைப்படம் எடுத்துக் கொள்வது அதிகரித்து வருகிறது.
இந்த செல்பி மோகத்தில் எந்த இடமாக இருந்தாலும் அங்கு செல்பி படம் எடுத்து கொள்வது , இளைஞர்களிடம் வாடிக்கையாகி விட்டது. நெரிசலான சாலையில், ஷாப்பிங் மால்களில் இப்படி தங்களை தாங்களே புகைப்படம் எடுத்து கொள்வது புற்றீசல் போல பரவி விட்டது.
இப்படி மொபைல் போனை வைத்து தங்களை தாங்களே போட்டோ எடுக்கும் போது, தங்களின் பினனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் போகும் போது விபரீதம் நேர்கிறது.இப்படி தான் சில இளைஞர்கள் ஓடும் ரயில் முன் செல்பி போட்டோ எடுக்கும் விபரீத முயற்சியில் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர்.
டெல்லியை அடுத்த மொராதாபாத், பரீதாபாத் பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களான யாகூப், இக்பால், அப்சல், அனிஸ் ஆகிய நான்கு பேர் தாஜ்மகாலை பார்ப்பதற்காக ஆக்ரா சென்றனர்.
மதுரா அருகே கோசிகாலா என்ற இடத்தில் ரயில்வே தண்டவாளத்தில் ஓடும் ரயிலின் முன்பாக நின்று கொண்டு செல்பி படம் எடுக்க விரும்பியுள்ளனர். நேற்று முன்தினம் காலை 9.30 மணி அளவில் இவ்வாறு புகைப்படம் எடுத்துக் கொள்ள முயன்றனர். அப்போது எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது.
அதன் முன் இப்படி போட்டோ எடுத்து கொள்ள விரும்பிய போது திடீரென தடுமாறினர். அந்த சில நொடிகளில் ரயில் மோதியது. மோதிய வேகத்தில் மூவரும் உடல் சிதறி விழுந்தனர்.இதுகுறித்து கோசி போலீசார் கூறுகையில், 4 வாலிபர்கள் ஓடும் ரயிலின் முன்பாக செல்பி எடுக்க முயன்றுள்ளனர். இதில் 3 பேர் ரயில் மோதி உயிரிழந்தனர்.
அனீஸ் என்ற வாலிபர் உயிர் தப்பினார் என்று தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment