Tuesday, January 27, 2015

புதுடெல்லி, ஜன. 27-
மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா, இன்று தனது பயணத்தின் கடைசி கட்டமாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார்.

தலைநகர் டெல்லியில் உள்ள சிறி கோட்டையில் கூடிய மக்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஒபாமா மத ரீதியாக பிளவுபடாமல் இருக்கும் வரை இந்தியா தொடர் வெற்றிகளை பெறும் என கூறினார்.

இந்தியாவில் இந்து, முஸ்லிம், கிறிஸ்து, சீக்கியர், பௌத்தர் மற்றும் ஜைனர்கள் என பல சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் மதத்தால் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஆனாலும், மனத்தால் மனித இனம் என்ற ஒரே குடையின் கீழ் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்த ஒற்றுமை நீடிக்கும் வரை இந்தியா என்றும் தொடர்ந்து வெற்றிகளை குவித்துக்கொண்டே இருக்கும்.

இந்திய மக்கள் திரைப்படங்களை பார்த்து ஷாரூக் போன்ற நடிகர்களையும் பாராட்டுகிறார்கள். அதே போல் தடகள வீரர் மில்கா சிங்கையும் பாராட்டுகின்றனர் என்று ஒபாமா தனது உரையில் குறிப்பிட்டார்.

இந்து மதத்தை சேர்ந்த சில அமைப்புகளின் செயல்பாடுகள் நாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிப்பதாக உள்ளது என நாட்டின் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ள நிலையில் ஒபாமா இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment