Wednesday, January 28, 2015

சென்னை: குவைத்தில் உள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரியவும், சவுதி அரேபியா அரசு மருத்துவமனையில் பணிபுரிய செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வெளிநாட்டு வேலை தேடுவோர் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், தன் மனுதாரர்களை பல்வேறு நாடுகளுக்கு பணியமர்த்தி வருகிறது.

வேலைநாடுவோரின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஊரகத் தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர்கள் தலைமையில் 31.1.2015 அன்று ஜோலார்பேட்டையில் உள்ள அரசினர் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் அரங்கமும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் இடம் பெற உள்ளது. அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன அரங்கில் இந்நிறுவனத்தின் செயல்பாடுகள், தற்போதுள்ள பணிக் காலியிடங்கள் ஆகிய விவரங்களை அறிந்து கொள்வதுடன் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது, குவைத் நாட்டிலுள்ள இந்திய தொலைதொடர்புத் துறையில் பணிபுரிய டிப்ளமோ தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்ற சிவில் மேற்பார்வையாளர்கள், 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் உள்ள கொத்தனார்கள் மற்றும் சமையலர்கள், துவக்கப்பள்ளி தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்ற லேபர்கள்,

 8ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் 3 வருட பணி அனுபவம் பெற்ற ரிக்கர் பணி அறிந்த லேபர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இரண்டு வருட பணி அனுபவத்துடன் 50 வயதிற்குட்பட்ட குவைத் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள இலகு ரக மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் மற்றும் டிப்ளமோ தேர்ச்சியுடன் சிவில் பிரிவில் 5 வருட அனுபவம் பெற்ற ஆட்டோகாட் இயக்குபவர்கள் தேவைப்படுகிறார்கள்.

மேலும், சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின் அரசு மருத்துவமனைகளுக்கு  2 வருட பணி அனுபவத்துடன் 55 வயதிற்குட்பட்ட அலோபதி மருத்துவர்கள் மற்றும் பிஎஸ்சி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களும் தேவைப்படுகிறார்கள்.

அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் செயல்பாடுகள் தொடர்பான விவரங்களை 044-22502267/ 22505886/08220634389 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவும் அல்லது  www.omcmanpower.com என்ற இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்” என்று கூறப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment