Friday, February 6, 2015

இறைவனிடம் குற்றவாளியாக நிற்க விரும்பவில்லை : எனது ஆட்சியில் எனது மகன்கள் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு....!!

சவூதி அரேபியாவின் புதிய மன்னராக பொறுப்பேற்ற மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்....

யாரும் எனது ஆட்சியில் அநியாயத்தக்கு உட்படுத்தப்படுவதையும் அதனால் இறைவனுக்கு முன்னால் நான் குற்றவாளியாக மாறுவதையும் நான் விரும்பவில்லை.

நான் வாழும் இந்த காலத்தில் எனது ஆட்சியின் கீழ் உள்ள குடிமக்கள் பாதிக்கப்பட்டால் எந்த துணையும் இல்லாமல் அவர் என்னை அணுகலாம், என்னிடம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்பை முறையிடலாம் அவருக்கு நிச்சயம் நீதி வழங்கப்படும்.

அப்படி முடியாதவர்கள் மின்னஞ்சல் மூலமோ அல்லது எமது அரசி்ன் இணையதளத்தின் மூலமோ தமது புகாரை எமக்கு தெரியப்படுத்தலாம் அல்லது தபால் நிலையங்கள் மூலமாக எந்த கட்டணமும் இல்லாமல் தமது புகார்களை எனக்கு அனுப்பலாம் என்றும் அவர் கூறியுள்ளார்

அப்படி அனுப்பப்படும் புகார்கள் எனது பிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் எனது குடும்பத்திற்கு எதிராக இருந்தாலும் எனது பேரபிள்ளைகளுக்கு எதிராக இருந்தாலும் அவைகளை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நீதி நியாயத்தை மட்டுமே கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி வழங்கபடும் என்றும் அவர் அறிவித்திருப்பது பலரையும் கவர்ந்திருக்கிறது.

முகநூல் முஸ்லிம் மீடியா கருத்து :

நமது நாட்டில் முதல்வராக இருக்கும் நபர்களின் படத்தை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு அராஜகம் புரிபவர்களுக்கு மத்தியில் ஒரு நாட்டின் மன்னரே தம்முடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் தவறு செய்தாலும் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பது இறைவனின் மேலான அச்சமே காரணமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடைய மகள் பாத்திமா திருடினாலும் கையை வெட்டுவேன் என்று கூறினார்கள்.

நபிகளாரின் வார்த்தையை பின்பற்றும் விதமாக சவூதி அரேபியா மன்னர் சல்மான் அவர்களின் அறிக்கை இருக்கிறது.

இதையே உலக நாடுகள் பின்பற்றினால் உலகம் முழுவதும் அமைதியும், மகிழ்ச்சியும் மிளிரும்.

தகவல் உதவி : சையது அலி ஃபைஜி
Next
This is the most recent post.
Previous
Older Post

0 comments:

Post a Comment