Tuesday, February 3, 2015

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில்  ஆம் ஆத்மி 35 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்று கருத்துக் கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஏபிபி நியூஸ், நீல்சன் நிறுவனம் தேர்தல் கருத்து கணிப்பை வெளியிட்டது.

அதில், பாரதிய ஜனதாவிற்கு 29 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  70 இடங்களை கொண்டுள்ள டெல்லி சட்டப்பேரவையில் ஆம் ஆத்மி 35 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என கூறப்பட்டுள்ளது.

இத்தேர்தலில் காங்கிரசுக்கு 6 இடம் கிடைக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. கெஜ்ரிவால் டெல்லியின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட 48 சதவீதம் பேரும், கிரண்பேடிக்கு 42 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லியின் 35 சட்டப்பேரவை தொகுதிகளை சேர்ந்த  6 ஆயிரத்து 396 பேரிடம் கடந்த 31 ஆம் தேதி இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. டெல்லி சட்டப்பேரவையை கைப்பற்ற பாரதிய ஜனதா, ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

0 comments:

Post a Comment