Tuesday, February 3, 2015

இந்தியா முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 191 பேர் பன்றிக் காய்ச்சல் தாக்கி உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரியில் மாதத்தில் 2 ஆயிரத்து 38 பேர் பன்றிக் காய்ச்சல் தாக்கத்திற்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் அருண் பாண்டா தெரிவித்துள்ளார்.

அதிகபட்சமாக தெலங்கானாவில் 629 பேர் பன்றிக் காய்ச்சலால் தாக்கப்பட்டு 34 பேர் உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

தமிழகத்தை பொறுத்தவரை 93 பேருக்கு பன்றி காய்ச்சல் ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அருண் பாண்டா கூறியுள்ளார். இதே போல டெல்லி, குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்ட்ரா, மத்திய பிரதேசம் ,ஹரியானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் பலருக்கு பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை 937 பேர் பன்றிக் காய்ச்சல் தாக்கத்திற்கு ஆளாகி அவர்களில் 238 பேர் உயிரிழந்துள்ளனர்.

பன்றிக் காய்ச்சலை பரவுவதை தடுக்க தேவையான உதவிகளை மாநிலங்களுக்கு வழங்கி வருவதாக தெரிவித்த அவர், இது தொடர்பாக சுகாதார துறை செயலாளர் மாநில அதிகாரிகளோடு வீடியோ கான்பிரன்சிங் மூலம் இன்று ஆலோசனை நடத்த உள்ளதாக கூறினார்.

0 comments:

Post a Comment