வி.களத்தூரில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய தடுக்கும் கல்வி அதிகாரிகளை கண்டிக்கும் ஆர்ப்பாட்டத்தை தமுமுக அறிவுத்துள்ளது. இது சம்மந்தமா T.R.M. சபியுல்லா செயற்கு உறுப்பினர், தமுமுக அவர்கள் உதவி காவல் ஆய்வாளர் அவர்களுக்கு மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் விவரம்
வி.களத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் இஸ்லாமிய மாணவிகள் சீருடையுடன் கூடிய தலை முக்காடு (ஹிஜாப்) அணிய தடை விதிக்கின்றனர். இது சம்மந்தமாக தலைமை ஆசிரியர் மற்றும் முதன்மை கல்வி அலுவலர் அவர்களையும் பல முறை சந்தித்து முறையிட்டும் இதுநாள் வரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை, மாவட்ட ஆட்சியர் முதன்மை கல்வி விசயத்தில் கல்வித்துறை அதிகாரிகள் மெத்தன போக்குடன் செயல்பட்டு வருகின்றனர்.
பெண்கள் மானம் காக்கும் தலை முக்காடு (ஹிஜாப்) என்பது இஸ்லாமிய பெண்களுக்கு கட்டாயமான ஒன்றாகும், இந்த முக்கிய விசயத்தில் குறுக்கீடாக இருந்து வரும் முதன்மை கல்வி அலுவர் (CEO) தலைமை ஆசிரியர் (HM) உதவி தலைமை ஆசிரியர் (AHM) அவர்களை கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து பள்ளியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இதற்கு தகுந்த பாதுகாப்பு வழங்கி உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் 21.02.2014 வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் வி.களத்தூர் அரசு மேல் நிலைப்பள்ளி முன்பாக நடை பெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-கல்லாறு.காம்


0 comments:
Post a Comment