அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. 7–வது வேட்பாளர் பட்டியலை அக்கட்சி நேற்று வெளியிட்டது. தமிழகத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் 25 தொகுதியில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுகிறார்கள்.
இதில் 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. சென்னையில் 3 தொகுதிகளில் வேட்பாளர்களை களம் நிறுத்த ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. மத்திய சென்னையில் ஜெ.பிரபாகர் நிறுத்தப்பட்டுள்ளார். வட சென்னை மற்றும் தென் சென்னை தொகுதிகள் உள்ளிட்ட 17 தொகுதிகள் வேட்பாளர்கள் பட்டியல் ஒரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கன்னியாகுமரியில் உதயகுமார், நெல்லையில் தேவராஜ், தூத்துக்குடி– புஷ்பராயன், கோவை– பொன்.சந்திரன், ஈரோடு– குமாரசாமி, திருப்பூர்– சக்கரவர்த்தி, சேலம்– சதீஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.
வேட்பாளர்கள் அனைவரும் தன்னார்வ தொண்டு நிறுவனம் (என்.ஜி.ஓ.) நடத்தக் கூடியவர்கள். திருப்பூர் வேட்பாளர் சக்கரவர்த்திக்கு 77 வயதாகும்.
மத்திய சென்னை வேட்பாளர் பிரபாகர், மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பல்வேறு சமூகப்பணிகளை மேற் கொண்டு வருகிறார்.

0 comments:
Post a Comment