திருச்சியில் போலி ஏ.டி.எம். கார்டுகள் மூலம் நூதன திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலி ஏ.டி.எம். கார்டு
திருச்சி தென்னூரை சேர்ந்தவர் பாபு(வயது 34). இவர் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு பாபு திருச்சி உறையூர் பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் ஏற்கனவே 2 வாலிபர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்கள் நீண்டநேரமாக வெளியே வரவில்லை. இதனால் அவர்களிடம் தான் பணம் எடுக்க வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அவர்கள் பாபுவை பணம் எடுக்க உள்ளே அனுமதித்தனர்.
அவரும் உள்ளே சென்று தனது கார்டை பயன்படுத்தி பணத்தை எடுத்தார். அப்போது அருகில் இருந்த 2 வாலிபர்களும் ஏராளமான ஏ.டி.எம். கார்டுகளை வைத்து இருந்தனர். இதனை கண்ட பாபு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி அந்த வாலிபர்களிடம் கேட்டபோது, பாபுவுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து ஏ.டி.எம். மையத்தில் இருந்து வெளியே வந்த அவர், உறையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
2 பேர் கைது
தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் கென்னடி, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் கமலநாதன், ஏட்டு தமிழரசன், அந்தோணிசெல்வம், செபாஸ்டின் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, 2 வாலிபர்களையும் பிடித்து உறையூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள், கருமண்டபம குளத்துக்கரையை சேர்ந்த முபாரக்அலி(24), கருமண்டபம் மாந்தோப்பை சேர்ந்த ராஜா(வயது 23) என்பது தெரியவந்தது.
மேலும், இவர்கள் திருச்சியில் பல்வேறு ஏ.டி.எம்.மையங்களில் வெளிநாட்டு போலி ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்தி பணத்தை திருடி வந்ததும் தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து, 2 பேரையும் போலீசார் கைது செயதனர். அவர்களிடம் இருந்து ரூ.18 ஆயிரம் ரொக்கப்பணம், 80 வெளிநாட்டு போலி ஏ.டி.எம்.கார்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய கருமண்டபத்தை சேர்ந்த இலங்கை வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள். அவரை பிடித்தால் இதில் வேறு யார்? யாருக்கு தொடர்பு இருக்கிறது என்கிற தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
வெளிநாட்டு போலி ஏ.டி.எம். கார்டுகள் கிடைப்பது எப்படி?
போலீசாரிடம் பிடிபட்ட முபாரக்அலி, ராஜா ஆகியோரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 80 வெளிநாட்டு போலி ஏ.டி.எம். கார்டுகளும் மலேசியாவில உள்ள ஒரு வங்கியின் பெயரில் தயாரிக்கப்பட்டு உள்ளது. ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எளிதாக எடுக்க வசதியாக கார்டுகளுக்கு பின்புறம் ரகசிய (பின்நம்பர்) எண்ணும் எழுதி வைக்கப்பட்டுள்ளது. இந்த கார்டுகள் அனைத்தும் மலேசியா, லண்டன் போன்ற நாடுகளில் வசிக்கும் வங்கி வாடிக்கையாளர்களின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்டு இருந்ததும், வெளிநாட்டில் வசிக்கும் சிலர், வாடிக்கையாளர்களின் வங்கி தகவல்களை ரகசியமாக தெரிந்து கொண்டு, கார்டுகளை தயார் செய்து இங்கு அனுப்பி வைக்கிறார்கள். அந்த கார்டுகளை இங்கு ஒரு கும்பல் கைப்பற்றி, பல்வேறு ஏ.டி.எம். மையங்களில் பணத்தை எடுத்து கொள்கிறார்கள். இதுபோல் லட்சக்கணக்கில் பணம் திருடப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து உள்ளனர். இதில் தொடர்புடைய முக்கிய நபரான இலங்கை வாலிபரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

0 comments:
Post a Comment