பெரம்பலூர்,: பெரம்பலூர் மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிக ளில் நடைபெறும் வாக்குப்பதிவைக் கண்காணித்திட கண்காணிப்புக் கேமரா மற்றும் லேப்டாப் களை பொறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் மூலம் தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. முறைகேடுகளை தடுக்க மாவட்ட அளவில் நியமிக்கப்பட்ட சிறப்பு பறக்கும்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களை சோதனையிட்டு, உரிய ஆவணங்கள் இன்றி ரூ50,000க்கு மேல் எடுத்துச்செல்லப் படும் பணத்தை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.
தேர்தல் நடைபெறும் வாக்குச் சாவடிமையங்களில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்திடவும், அங்கு நடக்கும் வாக்குப்பதிவு உள்ளிட்ட அனை த்து நடைமுறைக ளையும் பதிவுசெய்திடவும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது அதன்படி, அதற்கான பணி களை மாவட்ட நிர்வாகங் கள் தற்போது முழுவீச்சில் செய்துவருகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த இரண்டு தொகுதிகளில் மொத்தம் 590 வாக்குச் சாவடி மைய ங்கள் அமைக்கப்பட்டுள் ளன. இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் எவையெவை என மாவட்ட நிர்வாகத்தால் கணிக்கப்பட்டுள்ளன.
காவல்துறை, வருவாய்த்துறை புள்ளிவிபரங்கள் அடிப்படையிலும், ஏற்கனவே தேர்தல்நடந்த வரலாறுகளைக் கணக்கில் கொண்டும், பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 590 வாக்குச் சாவடிகளில் பதட்டமான வாக்குச்சாவடிகளில் நடக்கும் வாக்குப்பதிவு விபரங்களை பதிவுசெய்திட தேர்தல்பிரிவு லேப்டாப்களை சேகரித்து வருகிறது.
இதற்காக அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கு பள்ளிக் கல்வித்துறையால் வழங்கப்பட்டுள்ள 18 லேப்டாப்கள், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள 95 லேப்டாப்கள் ஆகியன தேசியத் தகவல் மையத்தின் மூலம் தேர்தல் பணிகளுக்காகப் பெறப்பட்டுள்ளன.
மொத்தத்தில் 150க்கும் மேற்பட்ட லேப்டாப்களைப் பெற திட்டமிடப் பட்டுள்ளது. இவற்றோடு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி வாக்குச்சாவடியின் நிலைமை, காலையில் வாக்குப்பதிவு தொடங்கியதுமுதல் வாக்குப் பதிவு முடியும்வரை கண்காணிக்கப்பட்டு பதிவுசெய்யப்பட உள்ளது.
இதனையொட்டி பெரம்பலூர் மாவட்ட தேசிய தகவல்மைய அதிகாரிகள்மூலம் மாவட்ட முதன்மைக் கல்விஅலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலகம் ஆகியவற்றின் மூலம் பெறப்பட்ட 100க்கும் மேற்பட்ட லேப்டாப்கள், சரியாக இயங்குகிறதா, பேட்டரி கெப்பாசிட்டி எப்படி உள்ளது, நாள்முழுக்க பதிவுசெய்ய வாய்ப்புள்ளதா என ஆராயப்பட்டு வருகிறது. இதில் தகுதியானவற்றை பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்த மாவட்ட நிர்வாகத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பொறுத்துவதற்காக கண்காணிப்புக் கேமராக்கள் அல்லது வெப்கேமராக்களை தேவைக்கேற்ப சேகரிக்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

0 comments:
Post a Comment