திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் நாளை தொடங்குகிறது. வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.நாளை தொடக்கம்திருச்சி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் 24–ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல்நாளை (சனிக்கிழமை) முதல் வருகிற 5–ந் தேதி வரை தினந்தோறும் காலை 11 மணி முதல் 3 மணி வரை நடைபெறும். இதில், அரசு விடுமுறை நாட்களான 30, 31–ந் தேதிகளில் வேட்பு மனுக்கள் பெறப்பட மாட்டாது.வேட்புமனு தாக்கலின் போது வேட்பாளருடன் எத்தனை வாகனங்கள் வந்தாலும், தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் 3 வாகனங்களுக்கு மட்டுமே உள்ளே வர அனுமதி அளிக்கப்படும். ஒரு வாகனத்தில் அதிகபட்சம் 5 பேர் மட்டுமே வர வேண்டும். எனினும், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு மனுதாக்கல் செய்யும் போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே உள்ளே வர அனுமதிக்கப்படுவார்கள்.பரிசீலனைவேட்புமனு பரிசீலனை வருகிற 7–ந் தேதி எடுத்து கொள்ளப்படும். வேட்பு மனுவை 9–ந் தேதி மாலை 3 மணி வரை வாபஸ் பெறலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் 9–ந் தேதி வெளியிடப்படும். ஓட்டுப்பதிவு 24–ந் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். பதிவான வாக்குகள் எண்ணிக்கை மே 16–ந் தேதி நடைபெறும். இத்தகவலை கலெக்டர் ஜெயஸ்ரீ முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Thursday, March 27, 2014
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment