Wednesday, March 19, 2014


ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் கேரள மக்களின் நலனுக்காக கேரள முஸ்லிம் கலாசார மையம் என்ற இந்திய அமைப்பு துபாயில் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில், துபாயில் வசிக்கும் கேரள மக்கள் ஓட்டு போடுவதற்காக, ஏப்ரல் 7ம் தேதி துபாயிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு செல்வதற்கு சலுகை விலையில் விமான டிக்கெட்டை ஏற்பாடு செய்து தருகிறதாம்.
இது குறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் எலிட்டில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய அரசு நாடுகளில் எங்கள் அமைப்பின் உறுப்பினர்களாக 50,300 பேர் உள்ளனர். துபாயில் மட்டும் 20,500 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்கள் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்வதற்காக சலுகை விலையில் விமான டிக்கெட் ஏற்பாடு செய்து தருகிறோம். தனியார் விமான நிறுவனம் ஒன்றும், ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனங்களும் சலுகை அளிக்கின்றன.
அதன்படி, தனியார் விமானம் மூலம் துபாயிலிருந்து கோழிக்கோடு செல்வதற்கு 165 பயணிகளுக்கு தலா ரூ.8,319 கட்டணத்திலும், ஏர் இந்தியா மூலம் 180 பயணிகளுக்கு ரூ.12,477 கட்டணத்திலும், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மூலம் 180 பயணிகளுக்கு ரூ.9,981 கட்டணத்திலும் டிக்கெட் வாங்கி தருகிறோம். இந்த சலுகை எங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு மட்டுமில்லை. கேரளாவை சேர்ந்த யாராக இருந்தாலும் எங்களை தொடர்பு கொண்டால் சலுகை பெற்று தருவோம்.
பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து அவர்களுக்கு தேவையான அளவுக்கு விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். ஓட்டு போடுவது அனைவரின் கடமை. அந்த கடமையை செய்ய உதவி செய்ய வேண்டுமென்பதே எங்கள் நோக்கம்

0 comments:

Post a Comment