பெரம்பலூர், சிதம்பரம் பாராளுமன்றதொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கள் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
பாராளுமன்ற தேர்தல்
தமிழ்நாடு முழுவதும் பாராளுமன்றதேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் நேற்று வேட்பு மனுதாக்கல் செய்தனர். பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட் பாளர் மருதராஜா, பாராளு மன்ற தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான தரேஸ்அஹமதுவிடம், தேர்தல் பார்வையாளர் சித்த லிங்கேஷ் முன்னிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அவரது மனைவி கலைச்செல்வி வேட்பு மனுதாக்கல் செய் தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்ன தாக கலெக்டர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மாவட்ட அ.தி.மு.க. அலு வலகத்தில் இருந்து தொண்டர் கள் மருதராஜாவிற்கு வர வேற்று வேட்பு மனு செய்திட வழிஅனுப்பினர்.
கலெக்டர் அலுவலகத்தில் வேட்பாளருடன் சென்று வேட்புமனுதாக்கல் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப் பட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப் பாளர்கள் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் பூனாட்சி, ரத்தினவேல் எம்.பி. முன்னாள் அமைச்சர்கள் தொட்டியம் சிவபதி, குளித்தலை பாப்பா சுந்தரம், வேளாண் வணிக வாரியத் தலைவர் ரவிச்சந்திரன், பெரம் பலூர் எம்.எல்.ஏ. இளம்பை தமிழ்செல்வன், துறையூர் எம்.எல்.ஏ. இந்திரா காந்தி , முசிறி முன்னாள் எம்.எல்.ஏ. ரத்தின வேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனு தாக்கல்
அரியலூரில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வேட்பு மனு தாக்கலையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை முன்பு நூற்றுக்கணக் கான அ.தி.மு.க.வினர் கையில் அ.தி.மு.க. கொடியுடன் குவிந் தனர்.
சிதம்பரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் செங்கோட்டையன் தலைமை யில் கே.கே.கலைமணி, எம்.எல்.ஏ.க்கள் அரியலூர் துரை.மணிவேல், காட்டு மன்னார்கோவில் முருகு மாறன் தலைமையில் வேட் பாளர் சந்திரகாசி அண்ணா சிலை, எம்.ஜி.ஆர். சிலை ஆகியவற்றுக்கு மாலை அணிவித்தார்.
பின்னர் அங்கி ருந்து ஜெயங்கொண்டம் ரோடு வழியாக வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வலமாக வந்தனர். கலெக்டர் அலு வலகத்தில் கலெக்டர் சரவண வேல்ராஜிடம் சந்திரகாசி தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தேர்தல் பொறுப்பாளர்கள்
அவருடன் தேர்தல் பொறுப் பாளர்கள் செங்கோட்டையன், கலைமணி, எம்.எல்.ஏ.க்கள் துரை.மணிவேல், முருகுமாறன் ஆகியோர் உடன் இருந்தனர். அ.தி.மு.க. மாற்று வேட்பாள ராக சந்திரகாசியின் மனைவி வனிதா, வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
அவருடன் புவனகிரி எம்.எல்ஏ. செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.பி. இளவரசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இளவழகன், அமரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் நிகழ்ச் சியில் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சங்கர், நகர செயலாளர் கண்ணன், ஒன்றிய செயலாளர் செல்வ ராஜ், கணேசன், மாவட்ட பஞ்சாயத்து தலை வர் தனலட்சுமி, கீழப்பழுவூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிச்சந்திரன், பருக்கல் ஊராட்சி மன்ற தலைவர் புகழேந்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சுயேட்சை மனுதாக்கல்
கரூர் மாவட்டம் குளித்தலை சபாபதி நாடார் தெருவை சேர்ந்தவர் எஸ்.கே.மனோ கரன்.(வயது54). திரிணாமூல் காங்கிரஸ் கடசியின் நகர செயலாளராக உள்ளார். இவர் பெரம்பலூர் பாராளு மன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட தொகுதி தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான தரேஸ் அஹமதுவிடம் தனி ஆளாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்

0 comments:
Post a Comment