சென்னை : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தம் தற்போது நடைபெற்று வருகின்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட வேண்டும் என்று விரும்பும் தகுதியுள்ள நபர்கள் www.elections.tn.gov.in/eregistration என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியல்களில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள் படிவம்-6ல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ அல்லது வாக்கா ளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலோ சமர்ப்பிக்கலாம்.வட்டாட்சியர் அலுவலகங்களில் உள்ள தலைமை துணை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களிலுள்ள தலைமை உதவியாளர், மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் உள்ள அலுவலக மேலாளர் ஆகியோர் விண்ணப்பங்களை பெற நிர்ணயிக்கப்பட்ட அலுவலர்க ளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
படிவம்-6ஐ சமர்ப்பிக்கும்போது தங்கள் வசிப்பிட முகவரிக்கான சான்றுடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். 18 முதல் 24 வயதுடையோர் தங்கள் விண்ணப்பத்துடன் தங்கள் வயதுக்கான சான்றினையும் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களின்மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டோருக்கு வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். இதேபோல், தங்கள் பெயர் மற்றும் விவரங்களில் திருத்தங்கள் செய்யப்பட விரும்புவோர் படிவம்8லும், பெயர் நீக்கலுக்காக படிவம் 7லும் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

0 comments:
Post a Comment