Tuesday, June 24, 2014

பெரம்பலூர் அருகே தனி யார் பஸ் மோதி வாலிபர் பலியானார். இதைதொடர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட முயன்ற தால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரம்பலூர் அருகே உள்ள பேரளியை சேர்ந்தவர்கள் ஜெயராமன் மகன் செல்வம் (27), பெரியசாமி மகன் துரைசாமி (29). நண்பர்களான இருவரும் பெரம்பலூர் அடுத்த சிறுவாச்சூரில் நடந்த உறவினர் ஒரு வர் நடத்திய கிடா வெட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு டூவீலரில் பேரளியிலிருந்து செல்வதற்காக இணைப்பு சாலையிலிருந்து திருச்சி& சென்னை நெடுஞ்சாலைக்குள் வந்தனர்.
அப்போது அந்த வழியாக மதுரையிலிருந்து சென்னை நோக்கி வந்த ஒரு தனியார் பஸ்& டூவீலர் மீது மோதியது.
 பின்னர் சாலையோரம் இருந்த பயணிகள் நிழற்குடையில் மோதி பஸ் நின்றது.
இந்த விபத்தில் படுகாயடைந்த செல்வம், துரைசாமி ஆகியோர் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
மேல்சிகிச்சைக்காக செல்வம், திருச்சிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் துரைசாமி சிகிச்சை பெற்று வருகிறார்.
 பஸ் மோதிய வேகத்தில் நிழற்கூடை இடிந்து விழுந்தது.விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீ சார் வழக்குப்பதிந்து பஸ் டிரைவரான விருதுநகரை சேர்ந்த முத்துமணி (46) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே சிறுவாச்சூர் பகுதியில் திருச்சி& சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஏற்கனவே வைத்திருந்த தடுப்பு பலகைகளை அகற்றியதால் தான் விபத்து நடந்தது என்று கூறி அப் பகுதி பொதுமக்கள் சிலர் சாலை மறியலில் ஈடு பட முயன்றனர்.இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

0 comments:

Post a Comment