Tuesday, June 3, 2014

கத்தர்: குடித்து விட்டு கார் ஓட்டிய இந்தியர் ஒருவருக்கு தண்டனையாக 40 சவுக்கடிகள் கொடுக்குமாறு கத்தர் நாட்டு குற்றவியல் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.
மேலும் அவருடைய ஓட்டுனர் உரிமத்தை இரண்டு மாதங்களுக்கு இரத்து செய்யவும் உத்தரவிடப் பட்டுள்ளது.

Al FAZAA என்று அழைக்கப்பட்டும் கத்தர் காவல் துறையினர், மேற்கூறிய இந்திய முஸ்லிம் ஓட்டுனர் மீது சந்தேகம் ஏற்பட்டு காரை நிறுத்தி விசாரித்தனர். அச்சமயத்தில் ஓட்டுனர் குடித்திருந்தாகவும், காரில் மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
கத்தர் நாட்டில் குடித்து விட்டு காரோட்டுவது சட்டப்படி மிகக் கடுமையான குற்றம்.
இதுபோன்ற சட்டங்களும், கடுமையான தண்டனைகளும் பாரபட்சமின்றி இந்தியாவிலும் அமலுக்கு வந்தால், குடித்துவிட்டு பேருந்துகள், பிற வாகனங்கள் ஓட்டுவதால் நிகழும் விபத்துகள் பெருமளவில் தவிர்க்கப்பட்டு உயிர்ச்சேதங்கள் குறைய வாய்ப்புண்டு.

0 comments:

Post a Comment