Tuesday, June 3, 2014

சவுதி அரேபியாவில் பணியாற்றும் பணியாளர்களுக்கான வேதனத்தை உரிய காலத்தில் வழங்க தவறும் எஜமானர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அவ்வாறான வேலை எஜமாநர்களிடம் 5 ஆயிரம் சவுதி அரேபிய ரியால்கள் தண்டப்பணமாக அறவிடப்படும் என சவுதி அரேபிய அரசாங்கம்  குறிப்பிட்டுள்ளது.

கடந்த வியாழக்கிழமை சவுதி அரேபிய தொழில் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட வரையரையின் கீழ் இந்த புதிய திட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சட்டம் எதிர்வரும் 60 நாட்களில் முழுமையாக அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சவுதி அரேபியாவில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு வேலை வாய்ப்பை பெற்றுள்ளவர்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment