Saturday, June 28, 2014

கடலூர் மத்திய சிறையில் இருக்கும் 60 இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு தமுமுக சார்பில் புனித ரமலான் நோன்புக்கான பொருட்கள் வழங்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தமுமுக ரமலானில் உதவிகள் செய்து வருவதால் இந்த வருடமும் தமுமுக வுக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கடலூர் மத்திய சிறையில் இருக்கும் 60 இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு கடலூர் வடக்கு மாவட்ட தமுமுக செயலாளர் வி.எம் ஷேக் தாவுத் அவர்கள் தலைமையில் புனித ரமலான் நோண்பினை நோற்பதற்காக சஹர்,மற்றும் இஃப்தார் இவைகளுக்காக 90,000
ரூபாய் மதிப்புடைய காய்கறிகள்,பழங்கள்,மளிகை பொருட்கள் முறையாக அனுமதி பெற்று கடலூர் மத்திய சிறைதுறையின் எஸ்.பி, மதிப்பிற்க்குறிய திரு முருகேசன் கூடுதல் எஸ்.பி மதிப்பிற்க்குறிய திரு செந்தாமரை கண்ணன் அவர்களின் அனுமதியோடு இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு முதல் 15 நோன்புக்கான ரூபாய் 45,000 மதிப்புடைய பொருட்கள் இன்று வழங்கப்பட்டது.கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து தமுமுக ரமலானில் உதவிகள் செய்துவருவதால் தமுமுக வுக்கு அனுமதியளிக்கப்பட்டது,
இந்த நிகழ்வின் போது மாவட்ட நிர்வாகிகள் தமுமுக நெல்லிக்குப்பம் நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
செய்தி தகவல் வி.எம்.ஷேக் தாவுத் (கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் தமுமுக)
நன்றி கொள்ளுமேடு ரிஃபாயி

0 comments:

Post a Comment