Wednesday, June 25, 2014

சில தினங்களுக்கு முன்பு புனித போர் இல்லாமல் வாழ்கையில்லை என்ற தலைப்பில் ஒரு குறும் படம் இணைய தளங்களில் வெளியிட பட்டிருந்தது. அதன் மூலம் பிரிட்டனை சார்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள்  ISIS படையில் அங்கத்தினராக இருப்பது  வெளியுலகிற்கு தெரிய வந்தது.
இந்த செய்தியை வெளியிட்ட பிரிட்டன் பத்திரிகை DAILY MAIL அவர்களை தீவிரவாதிகளாக மாற்றியது. சவுதியை சார்ந்த அறிஞர் அரீபிதான்  தீவிரவாத சிந்தனைகளின் உறைவிடமாக திகழ்கிறார் என்றும் அந்த பத்திரிகை குற்றம் சாட்டி இருந்தது.
இந்த மூன்று இளைஞர்களும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிட்டனின் கார்திப் நகரில் உள்ள இறை இல்லத்தில் அரிபி உரை நிகழ்தியபோது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் என்றும் அவரது உரைதான் இவர்களை திசை திருப்பி உள்ளது என்றும் அந்த பத்திரிகை கூறி இருந்தது.
இதற்கு மார்க்க  அறிஞர் அரீபியின் அலுவலகம் கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளது.   சில ஆண்டுகளுக்கு முன் அரிபி மனிதாபிமானத்தை பற்றி தான் பிரிட்டனில் உரை நிகழ்த்தினார் என்றும் அவரது உரைக்கும் தீவிரவாதத்திற்கும்  எந்த தொடர்பும் இல்லை என்றும் கூறியிருப்பதோடு அந்த பத்திரிகைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்காக தனது வழக்கறிஞரையும் அரீபியின் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது.
அந்த பத்திரிக்கையின் பொய் முகத்தை நீதிமன்றத்தில் தோலுரித்து காட்ட போவதாகவும் அரீபியின் அலுவலகம் கூறியுள்ளது.  மேலும் தீவிர வாததிற்கும் விடுதலை போரட்டத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் ஊடகங்கள் உளறி வருவதாகவும் மார்க்க அறிஞர்களையும் போராளிகளையும் தீவிரவாதிகளாக சித்தரிக்கும் ஊடகங்கள் தங்கள் போக்கை மாற்றிகொள்ள வேண்டும் என்றும் உலக ஊடகங்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

0 comments:

Post a Comment