Saturday, June 28, 2014

கோவை ராம்நகர் காளிங்கராயன் வீதியை சேர்ந்தவர் யாசர் (வயது 23). ஓட்டல் நடத்தி வருகிறார். இவர் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு வெளிநாட்டு நிறுவன சிக்கன் கடையில் இருந்து, சிக்கன் வறுவல் (6 பீஸ்கள் கொண்ட பாக்கெட்) உணவினை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் அதனை சாப்பிடத்தொடங்கினார். அப்போது ஒரு சிக்கனை சாப்பிடுவதற்காக எடுத்து பிய்த்தபோது அதன் உள்ளே சுருண்ட நிலையில் புழு இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள் சாப்பிடுவதை நிறுத்தினர்.
இது குறித்து அந்த சிக்கன் கடைக்கு தகவல் கொடுத்தனர். அங்கிருந்து வந்த ஊழியர்கள், அதற்கு பதிலாக வேறு சிக்கன் பாக்கெட் தந்து விடுகிறோம். இல்லை என்றால் அதற்குரிய பணத்தை திருப்பி தந்து விடுகிறோம் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் யாசர், இந்த சிக்கனை சாப்பிட்டு எங்களுக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வது? என்று கூறி உள்ளார். அதற்கு அவர்கள், சரியான பதிலை சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டதாக தெரிகிறது.
இதைத் தொடர்ந்து யாசர், கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறையிடம் கொடுத்த புகாரின் பேரில், அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த புழு இருந்த சிக்கனை கைப்பற்றி பரிசோதனைக்காக எடுத்து சென்றனர். பரிசோதனைக்கு பிறகு, புழு இருந்த சிக்கன் வறுவல் விஷத்தன்மையாக மாறி இருந்தால், அந்த நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 comments:

Post a Comment