Tuesday, July 22, 2014

பாலஸ்தீனத்தின் காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 572-ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும் அப்பாவி பொதுமக்கள் மீதான இந்த கொடூரத் தாக்குதலை நிறுத்த இஸ்ரேல் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தரப்பில் இதுவரை 29 பேர் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இவர்களில் 27 பேர் இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 2 பேர் பொதுமக்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நேற்று தெற்கு இஸ்ரேலில் ஊடுருவ முயன்ற ஹமாஸ் கிளர்ச்சியாளர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு காஸாவில் உள்ள சுரங்கப்பாதை வழியாக இஸ்ரேலுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த இவர்கள் முயன்றனர். அப்போது இஸ்ரேல் பாதுகாப்புப் படையினர் அவர்களை சுற்றி வளைத்து சுட்டுக் கொன்றனர்.
ஜூலை 8-ம் தேதி இஸ்ரேல் தொடங்கிய ஆபரேஷன் புரொடக்டிவ் எட்ஜ் தாக்குதலில் இதுவரை 572 பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர். மேலும், 3,100 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலோனோர் அப்பாவி பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment