Tuesday, July 22, 2014

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து எந்த தீர்மானமும் கொண்டுவரப்படாது என மாநிலங்களவையில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
காஸா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்த விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும், இஸ்ரேலும், பாலஸ்தீனமும் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த முன்வரவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் தீர்மானம் பற்றிய கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் எதிர்க்கட்சியினர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

0 comments:

Post a Comment