Sunday, July 20, 2014

மேற்காசிய நாடுகளை சேர்ந்த 18 நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை சரிசமமாக உள்ளதாகவு தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக சதவீத அளவை கொண்டுள்ளதாகவும் ஐ.நா.அமைப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஆய்வில் தெரிவித்திருப்பதாவது: கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி இந்தியாவில் இளைஞர்களி்ன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களில் 10முதல் 19 வயதுடையவர்கள் 253 மில்லியனாகவும், 15 முதல் 24 வயதுடையோர் எண்ணிக்கை 231 மில்லியனாகவும் உள்ளது. இவர்களில் பெரும்பாலோனோர் கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர்.
கர்நாடகா, ஆந்திரா, ஒடிசா,மேற்குவஙகாளம் போன்ற மாநிலங்கள் 85-95 சதவீதம் வரையல் கல்வி அறிவு பெற்றுள்ளனர் தமிழகத்தை பொறுத்த வரையில் கடந்த 10 ஆண்டுகளாக அதிக சதவீத அளவை கொண்டுள்ளது.
கிராமப்புறங்களில் வாழும் மக்கள் தொகையில் சுமார் 72 சதவீதம் பேர் இளைஞர்களாகவும், 68 சதவீதம் பேர் நகர்புறங்களை சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

Post a Comment