Monday, July 28, 2014

அமீரகம் துபையில் இன்று 28/07/2014 திங்கள் கிழமை நோன்புப்பெருநாள் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. டேரா துபை ஈத்காவில் நடந்த நோன்புப்பெருநாள் தொழுகையில் நம் வி.களத்தூர் சகோதரர்கள் பலர் கலந்து கொண்டு சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

இங்குள்ள அதிகபட்ச பள்ளிவாசல்களில் நோன்புப் பெருநாளுக்கான தொழுகை நடத்தப்பட்டாலும், துபை டேரா பகுதியில்
வசிக்கும் நம் வி.களத்தூர் சகோதரர்களில் அநேகமானோர்களும் மற்றும் பிற ஊர்க்காரர்களும், பிற நாட்டவர்களும் இங்குள்ள ஈத்கா மைதானம் நோக்கியே தொழுவதற்காக வருவார்கள்.

சுமார்  ஒரு இலட்சம்  மேற்ப்பட்டோர் வரை கலந்துகொண்ட இந்த பெருநாள் தொழுகையின் காலைப்பொழுதினில் அனைவரும் புத்தாடையுடன் தொழுகையை முடித்துவிட்டு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி முசாஃபா செய்து கொண்டு பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்ட காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
அதன் புகைப்படங்கள் இதோ...






















புகைப்படம் தொகுப்பு - முஹம்மது இக்பால்

0 comments:

Post a Comment