நோன்பு இருந்த இஸ்லாமிய ஊழியர் ஒருவரது வாயில் வலுக்கட்டாயமாக ரொட்டித் துண்டை திணித்ததாக சிவசேனா எம். பி. மீது புகார் எழுந்துள்ளது.
டெல்லியில் தமிழ்நாடு இல்லம் உள்ளதுபோன்று அனைத்து மாநிலங்களுக்குமே விருந்தினர் விடுதி உள்ளது. இந்த விடுதிகளில் அந்தந்த மாநிலங்களில் இருந்து டெல்லிக்கு வரும் முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் தங்குவது வழக்கம்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று ‘மகாராஷ்ட்ரா சதான்’ என்ற மகாராஷ்ட்ரா விருந்தினர் விடுதிக்கு வந்த சிவசேனா எம்.பி.க்கள் சிலருக்கு உணவு பரிமாறப்பட்டுள்ளது. ஆனால் அந்த உணவு தரம் குறைந்ததாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விடுதிக்கான உணவு சப்ளையை இந்தியன் ரயில்வேக்கு சொந்தமான துணை நிறுவனம் ஒன்றுதான் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தரம் குறைந்த உணவால் ஆத்திரமடைந்த சிவசேனா எம்.பி.க்கள் கத்தி ரகளை செய்துள்ளனர். இதில் அங்கிருந்த சுவர் கடிகாரம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டது.
அத்துடன் ஷிரிகாந்த் ஷிண்டே என்ற சிவசேனா எம்.பி., அந்த விடுதியின் கேட்டரிங் கண்காணிப்பாளரானஅர்ஷத் ஜுபைர் என்ற இஸ்லாமியரது வாயில் வலுக்கட்டாயமாக ரொட்டித்துண்டுகளை திணித்துள்ளார். அந்த சமயத்தில் அவர் நோன்பு இருந்துள்ள நிலையில், நடந்த சம்பவங்கள் அனைத்தும் வீடியோ பதிவாகிக் கொண்டிருந்துள்ளது. ஆனால் அதனை சிவசேனா எம்.பி.க்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இந்நிலையில் இது பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சிவசேனா எம்.பி.க்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தங்களது பிரதிநிதி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மகாராஷ்ட்ரா விடுதிக்கு உணவு சப்ளை செய்துவந்த இந்தியன் ரயில்வேயின் துணை நிறுவனம், அதனை நிறுத்திக்கொண்டது. இந்நிலையில் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்புக் கோரி மகாராஷ்ட்ரா அரசின் பிரதிநிதியாக உள்ள அந்த விடுதியின் ஆணையர் பிபின் மல்லிக் அந்நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில் தங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை சிவசேனா எம்.பி.க்கள் மறுத்துள்ளனர். நடந்த உண்மைகளை மறைத்து மல்லிக் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விடுதியில் எப்பொழுதுமே தரம் குறைந்த உணவுகள் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்துள்ள அவர்கள், தங்களுக்கு தங்குவதற்காக மிகச்சிறிய அறைகளே ஒதுக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்..

0 comments:
Post a Comment