அறிவை பயன்படுத்தி ஆண்டவனை வணங்க சொல்லும் மார்க்கம் இஸ்லாம்என்று ஈமான் தமிழ் இலக்கிய பேரவை இஃப்தார் நிகழ்ச்சியில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகன்குறிப்பிட்டார்.
ஈமான் தமிழ் இலக்கிய பேரவை சார்பில் இப்தார் மற்றும்1000 நபர்களுக்கு ரமளான்அன்பளிப்பு வழங்கும் நிகழ்ச்சி சென்னை எழும்பூர் ஹோட்டல் சிராஜ் அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது.
ஈமான் தமிழ் இலக்கிய பேரவை தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளருமான திருப்பூர் எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இப்பேரவையின் பொதுச்செயலாளரும், தி.மு.க வட்டச் செயலாளருமான எம்.ஏ. கனி வரவேற்றுப் பேசினார். இந்திய யூனியன் முஸ்லிம்லீக் தமிழ் நாடு மாநில தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் வாழ்த்துரை வழங்க திமுக பொதுச் செயலாளர்பேராசிரியர் க.அன்பழகன் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர்பேசியதாவது:
இந்த இப்தார் நிகழ்வு ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவிக்கும் அருமையான நிகழ்வாகும்.
எந்தவொருசமயத் திலும், எந்தவொரு மதத்திலும் இல்லாதது இஸ்லாத்தில் மட்டுமே உள்ளது.
ஏழைக ளுக்கு-வாடியவர்களுக்கு- ஆதரவற்றவர்களுக்கு- சமுதாயத்தில் தாழ்ந்து கிடக்கிறவர்களுக்கு உதவுகின்ற விழா.1400 ஆண்டுகளுக்கு முன்அரபு நாட்டில் தோன்றியிருந்தாலும் அதில் உள்ள பல கருத் துக்கள் திராவிட நெறியோடு ஒத்துப்போகக் கூடியவை.
சீனா சென்றாகிலும் சீர்கல்வி தேடு, கற்றபடி நடப்பதுஅறிஞருக்கு அழகு என்றார் நபிகள் நாயகம்.வாகன வசதிகள் இல்லாத அந்தக் காலத்தில் ஒட்டகமே போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட அந்தக் காலத்தில் நெடுஞ்தொலைவில் உள்ளசீனாவிற்கு சென்று அறிவைதேடச் சொன்னார்கள் என்றால்அறிவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுத் துள்ளார்கள் என்பதை புரிந்துக்கொள்ள முடியும்.
அறிவைப்பயன்படுத்தி ஆண்டவனை வணங்கச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம்.
ஆண்டவனை நேசிப்பவன்முதலில் மனிதர்களை நேசிக்கட்டும். ஆண்டவனை நேசிப்பது உனக்காக, மனிதனை நேசிப்பது ஆண்ட வனுக்காக, இந்த உயர்ந்த தத்துவத்தைபுரிந்துக் கொண்டு நடந்தால் பிரச்சனை இல்லை.
இந்தஅறநெறியை வகுத்து தந்தது நபிகள் நாயகம். இஸ்லாம் என்றால் அமைதியை நிலை நாட்டக்கூடியமார்க்கம் – இணைந்து வாழும் நெறிதான் இஸ்லாம். ஏழையின்சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்ற தத்துவத்தை நிலை நாட்டும் இஸ்லாமிய நெறியை கட்டிக்காப்பாற்ற இத்தகைய நிகழ்ச்சிசிகள் உத வட்டும். இவ்வாறு பேராசிரியர்க.அன்பழகன் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சமுதாயபுரவலர் எஸ்டி கொரியர் நவாஸ்கனி, இந்திய யூனியன் முஸ்லிம்லீக் நிர்வாகிகள் காயல் மகபூப்,கே.எம்.நிஜாமுதீன், மில்லத்எஸ்.பி.முஹம்மது இஸ்மாயில்,எம்.ஜெயினுல் ஆபிதீன், கோவை எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டஏராளமானோர் கலந்துகொண்டனர்.

0 comments:
Post a Comment