முஸ்லிம்கள் மீதான தாக்குதல்கள் குறித்து ரியாத்தை மையமாகக் கொண்டு இயங்கி வரும் உலக முஸ்லிம் இளைஞர் பேரவை அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை, சீனா மற்றும்; மியன்மார் போன்ற நாடுகளில் பௌத்த கடும்போக்குவாதிகளினால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டு வருவதாக செல்லா அல்வொஹாபீ (Saleh S. Al-Wohaibi)தெரிவித்துள்ளார்.
குறித்த மூன்று நாடுகளிலும் சிறுபான்மை முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
உலக வாழ் முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்பு அனுஸ்டித்து வரும் நிலையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி சார் உதவிகளை வழங்க சட்ட சிக்கல்க் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தர்ப்பம் கிடைத்தால் நிதி உதவிகளை வழங்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறெனினும் இலங்கை சீனா ஆகிய நாடுகளில் வேறும் நிறுவனங்களுடன் தமது அமைப்பு இணைந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

0 comments:
Post a Comment