ஜூலை.27-பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா ஒ0ரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர்கூறி இருப்பதாவது:-
அதில் அவர்கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் இருந்து ஹஜ்யாத்திரை செல்ல 13 ஆயிரத்து159 பேர் இந்த ஆண்டுதமிழ்நாடு ஹஜ் கமிட்டிக்குவிண்ணப்பித்திருந்தனர். ஹஜ்பயணத்திற்கு மும்பையில்உள்ள ஹஜ் கமிட்டி தலைமையகம் வழிகாட்டுதலின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதன்படி தமிழ்நாட்டுக்கு 2672 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில்1180 இடங்கள் முன்பதிவுஅடிப்படையிலானது. 1492 இடங்கள் பொது அடிப்படையிலானது.
கடந்த ஆண்டைவிட 100 இடங்கள் மட்டுமே தற்போதுதமிழ்நாட்டுக்கு கூடுதலாகஒதுக்கப்பட்டுள்ளது. ஏராள மானபேர் ஹஜ் யாத்திரைக்கு செல்லவிண்ணப்பித்துள்ள நிலையில்அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இதற்கு முன்பு ஒவ்வொருஆண்டும் மத்திய அரசு கூடுதல் இடங்களை ஒதுக்கி அவர் களின்விருப்பத்தை நிறை வேற்றிஉள்ளது. இது தமிழ் நாட்டில் இருந்து ஹஜ் யாத்திரைசெல்பவர்களுக்கு உதவியாக இருந்தது. இதன் மூலம் கடந்தஆண்டு 3696 பேர் ஹஜ்யாத்திரைக்கு சென்றிருக்கிறார்கள். இந்த ஆண்டு பெரிய எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்து இருந்தனர். ஆனால் குறைவான இடமே ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தாங்கள் நேரடியாக தலையிட்டு தமிழ்நாட்டில் இருந்து நிறைய பேர் ஹஜ்யாத்திரைக்கு செல்ல காத்திருப்பதை கருத்தில் கொண்டுஅதிக இடங்களை ஒதுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும் மத்திய வெளிவிவகார துறைக்கு இதற்கானசிபாரிசுகளை கூறி அதிக இடங்களை ஒதுக்க வேண்டும். இதன் மூலம் ஏராளமான பேர்பயனடைவார்கள். இவ்வாறுஅந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

0 comments:
Post a Comment