Saturday, July 26, 2014

ரீசார்ஜ் செய்யும் ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் நிச்சய பரிசு கிடைக்கும் என்று வோடஃபோன் நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் இந்தியா, ஏறக்குறைய 160 மில்லியன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைச் சென்றடையும் புதிய முயற்சியாக ‘எவரி ரீசார்ஜ் வின்ஸ்’ என்ற சிறப்பு திட்டம் அறிவித்துள்ளது.
இதன் மூலம், ஒவ்வொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளருக்கும் நிச்சய பரிசு கிடைக்கும். இந்த மாதம் 24ல் இத்திட்டம் அமலுக்கு வந்துள்ளது. ரீசார்ஜ் (இதில் டாப் அப்ஸ், போனஸ் கார்ட்கள், பிளான் வவுச்சர்கள் உள்பட) செய்யும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் இச்சலுகை பொருந்தும். வாடிக்கையாளர்கள் வழக்கமாக ரீசார்ஜ் பலன்களைவிட அதிக பலன்களை கொடுப்பதாக இத்திட்டம் இருக்கும்.
ரீசார்ஜ் செய்த 4 மணி நேரத்தில் பலன்களை பெறலாம். இச்சலுகை மூலம் கிடைக்கும் விருதுகள், வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் ரீசார்ஜ் அளவை பொருத்து அமையும். வாடிக்கையாளர்கள் அதிகம் ரீசார்ஜ் செய்து, பெரியளவில் வெகுமதிகளைப் பெற ஊக்குவிப்பதாகவும் இருக்கும் என்று வோடஃபோன் இந்தியாவின் தமிழ்நாடு வர்த்தகத் தலைவர் அபூர்வா மெஹ்ரோத்ரா கூறினார்.

0 comments:

Post a Comment