குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக தெலங்கானாவில் குடிமக்கள் அடையாள அட்டை அறிமுகமாகிறது.
தெலங்கானா மாநிலத்தில் குடும்பை அட்டைதாரர்களுக்கு, மாநில அரசு சார்பில் குடிமக்கள் அடையாள அட்டை வழங்கப்படும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்தார்.
ஐதராபாதில் பொது விநியோகத்துறை அதிகாரிகளுடனான சந்திப்புக் கூட்டத்திற்கு பின் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ஒருங்கிணைந்த ஆந்திரத்தில் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, மத்திய அரசு வழங்கிய ஆதார் அட்டை ஆகியவற்றில் போலி அட்டைகள் பெருகிவிட்டன எனப் புகார்கள் வந்ததால், குடிமக்கள் அடையாள அட்டை என்ற பெயரில் புதிய குடும்ப அட்டைகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.
இதில் தெலங்கானா மாநில அரசின் முத்திரை இடம் பெற்றிருக்கும். ரேஷன் பொருட்கள் பெறுவது, அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவது ஆகியவற்றுக்கு இனி இந்த புதிய அட்டையைத்தான் பயன்படுத்த வேண்டும். பாஸ்போர்ட் வழங்குவதற்கு பின்பற்றப்படும் நடைமுறைபோல மாநில அரசு அதிகாரிகள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுத்து, இந்தப் புதிய குடிமக்கள் அடையாள அட்டையை வழங்குவார்கள்.
இந்தப் புதிய அட்டை அடுத்த மாதம் வழங்கப்படும். இதை கண்காணிப்பு அதிகாரிகள் திடீர் சோதனைகள் நடத்தி, உண்மைத் தன்மையை சரிபார்ப்பார்கள். அதில் தவறுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்...

0 comments:
Post a Comment