Saturday, July 5, 2014

பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நிறுவனத்தின் புதுமையான யோசனை ஒன்றை இப்போது செயல் வடிவத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
இண்டர்நெட் கனெக்‌ஷன் இல்லாவிட்டாலும் கூட நம் மொபைல் ஃபோனிலிருந்து இந்தியா முழுவதும் இலவசமாகப் பேசலாம்.
எப்படி?
ஃப்ரீகால் என்ற  இணைய தளத்தில் (www.freekall.in) நாம் நம்முடைய விபரங்களைப் பதிந்து கொண்டால் போதும். 1800-108-4444 என்ற நம்பருக்கு டயல் செய்து விட்டு கட் செய்தால், அடுத்த சில நொடிகளில் 80679 15000 என்ற எண்ணிலிருந்து நமக்கு அழைப்பு வரும். பத்து நொடிகளுக்கு விளம்பரம் ஒலிபரப்புவார்கள். அதனைக் கேட்ட பிறகு நமக்குத் தேவையான நம்பரை அழுத்தினால் 12 நிமிடங்கள் வரை பேசிக் கொள்ளலாம்.
முதல் முறை நமது விபரங்களை அவர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து கொள்ள மட்டும் தான் இணையம் தேவை.
வெகு விரைவிலேயே உலகம் முழுதும் உள்ள எந்த ஃபோனையும் தொடர்பு கொள்ளச் செய்யப் போவதாக ஃப்ரீகால் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே வெளிநாடுகளில் இதே போன்ற சேவை நிறைய இருக்கிறது. இந்தியாவில் இது தான் முதல் முறை என்கிறார்கள்.
  • நம் வயது, வேலை, மின்னஞ்சல் முகவரி, பெயர், இடம் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அந்த இணைய தளத்தில் பதிவு செய்கிறோம். எனவே ஒரு முழுமையான, சரியான மொபைல் டேட்டா பேஸ் அவர்கள் வசம் உருவாகிறது. உதாரணமாக, பெங்களூருவைச் சேர்ந்த ஆண்கள் 18 வயது உள்ளவர்களின் மொபைல் நம்பர் வேண்டுமென்றால், ஓரிரு விநாடிகளில் அவர்கள் இணைய தளத்தில் பதிவு செய்து கொண்டவர்களிடமிருந்து உருவி விடலாம். இது தேவையற்ற சில விளம்பர SMS, அழைப்புகளை உருவாக்கலாம்.
  • இலவச சேவை வழங்குவதால், அவர்கள் நமது விபரங்களை தனியார் விளம்பர நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் இல்லை.
  • நிமிடம் ஒன்றுக்கு சுமார் 3,000 பேர் வரை இப்போது இந்த இலவச சேவையை உபயோகிப்பதாகத் தகவல். இன்னும் ஓரிரு மாதங்களில் இது பல மடங்காகப் பெருகும் போது அதனை அவர்களால் சமாளிக்க இயலுமா என்பதும் தெரியவில்லை.
  • ஆரம்பத்தில் இதே போல இலவசமாக ஆரம்பித்து, பிறகு சிறிய அளது சந்தாத் தொகை என்று மாறிய கதைகள் இணையத்தில் நிறையவே இருக்கிறது.
  • நமது அழைப்புகளும் 80679  15000 என்ற எண்ணிலிருந்து தான் செல்கிறது. எனவே நாம் அழைக்கும் நபருக்கு குழப்பம் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
இருந்தாலும் ஒரு புதுமையான முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.

0 comments:

Post a Comment