Wednesday, July 2, 2014

மொசூல்: சிரியா மற்றும் இராக்கின் சில பகுதிகளை இணைத்து ஐ எஸ் ஐ எஸ் --Islamic State of Iraq and al-Sham --போராளிகள் உருவாக்கிய
புது 'இஸ்லாமிய நாட்டு' ஆட்சியாளராக -- கலீபாவாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் அபூபக்ர் அல் பக்தாதி, ஒரு ஒலி நாடா வெளியிட்டுள்ளார். அதில் உலக முஸ்லிம்களுக்கு, புதிய இஸ்லாமிய நாட்டில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இணையத்தில் வெளியான 20 நிமிட ஒலி நாடா உரையில், உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் புதிதாக உருவாகியுள்ள இஸ்லாமிய அரசை பலப்படுத்த வேண்டும் என்றும் அதற்காக முஸ்லிம்கள் இந்தப் புதிய இஸ்லாமிய நாட்டுக்கு வந்து குடியேறுவது அவர்களின் கடமை என்றும் நீதிபதிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ராணுவ மற்றும் நிர்வாகத் திறமை கொண்டவர்கள் இந்தப் புதிய இஸ்லாமிய தேசத்துக்கு வரவேண்டும் என்றும் அல் பக்தாதி அழைத்துள்ளார்.
.ஓ! முஸ்லிம் மக்களே உங்கள் நாட்டுக்கு ஆயுதங்களுடன் விரைந்து வாருங்கள். மத்திய ஆப்பிரிக்க குடியரசு முதல் மியான்மர் வரை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குப் பழி வாங்க, நமது புனிதப் போரைத் துவக்க வாருங்கள் என அவர் தம் அழைப்பில் கூறியுள்ளார்
ஆங்கிலம், ரஷ்யன், ஜெர்மன். ஃப்ரெஞ்ச், அல்பேனியன் மொழிகளிலும் அல்பக்தாதியின் அழைப்பு மொழிமாற்றம் செய்யப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment