Friday, August 15, 2014

சவூதி அரேபியா காஸா மக்களுக்காக 80 மில்லியன் டொலர்களை உதவியாக வழங்கியுள்ளதாக எகிப்துக்கான சவூதி அரேபியத் தூதுவர் அஹ்மத் பின் அப்துல் அஸீஸ் அல்கத்தான் தெரிவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறும் போது, “பலஸ்தீன் மக்களின் உணவு, மற்றும் வைத்திய செலவுகளுக்காக அங்கு இயங்கும் செம்பிறைச் சங்கத்தின் வங்கிக் கணக்கில் 200 மில்லியன் ரியால்கள் (53 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமாக) வைப்பிளிட்டுள்ளதாகவும், இது தவிர காசாவில் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான தாக்குதல்கள் காரணமாக காயப்பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதில் சுகாதார அமைச்சு முகம் கொடுக்கும் பிரச்சினையை நீக்குவதற்காக வேண்டி சுகாதார அமைச்சுக்கு 100  மில்லியன் ரியால்கள் (கிட்டத்தட்ட 27 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) உதவியாக வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment