Friday, August 15, 2014

பெரம்பலூர் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு காயிதே மில்ல நகரை சேர்ந்த ஷாகுல்ஹமீது மகன் அசாருதீன்(18), கார் டிரைவர். சம்பாதிக்கும் பணத்தை பெற்றோரிடம் தராததால் கண்டித்தனர்.இதனால் மனமுடைந்த அசாருதீன் நேற்று முன்தினம் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அசாருதீனை பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து, மேல்சிகிச்சைக்காக திருச்சி கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அசாருதீன் இறந்தார்.
இதுகுறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

Post a Comment