எபோலா வைரஸ் பாதிப்பு மிகவும் குறைத்து மதிப்பிடப்படுவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. நோய் பரவலை தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும் எனவும் அந்த அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.
மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் கடந்த சில மாதங்களாக பரவி வரும் எபோலா வைரஸினால் ஆயிரத்து 60 பேர் பலியாகியுள்ளனர். ஆயிரத்து 975 பேர் வைரஸ் பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எபோலா வைரஸ் தாக்குதலுக்கு அங்கீகரிக்கப்பட்ட தடுப்பு மருந்து இதுவரை கண்டறியப்படவில்லை. இந்நிலையில் கனடாவில் கண்டறியபப்ட்டதாக கூறப்படும் மருந்து புதன் கிழமை மேற்கு ஆப்ரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும் இதை நேரடியாக மனிதர்கள் மீது பயன்படுத்துவது குறித்து பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

0 comments:
Post a Comment