உத்தரபிரதேசத்தில் உள்ளது ஜாத்வாட் கிராமம். இங்கு குஜ்ஜார் இனமக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு நேற்று முன்தினம் கிராம பஞ்சாயத்து கூடியது. இதில், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், திருமணமாகாத பெண்களுக்கு ஈவ் டீசிங் உள்ளிட்ட தொல்லைகள் ஏற்பட, மொபைல் போன் பயன்படுத்துவதும், ஜீன்ஸ் உள்ளிட்ட விரும்பத்தகாத வகையில் உடையணிவதுதான் காரணம் என்று கூட்டத்தில் புகார் கூறப்பட்டது.
இந்த பிரச்னைகளுக்கு முடிவுகட்டும் விதத்தில் திருமணமாகாத பெண்கள் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

0 comments:
Post a Comment