எபோலா வைரஸ் அறிகுறிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஒருவர் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபர், கினியாவில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். கினியாவில் இருந்து நேற்றிரவு சென்னை திரும்பிய அவர் பிரிசோதனைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட நபர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையின் தொற்று நோய்ப்பிரிவுத் தலைவர் ரகுநந்தன் தெரிவித்துள்ளார். பரிசோதனைக்காகவே அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவருக்கு எபோலா வைரஸ் அறிகுறிகள் இல்லை என்றும் மருத்துவர் ரகுநந்தன் கூறியுள்ளார்.
இருப்பினும் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள அந்த நபரின் ரத்தமாதிரி ஆய்வுக்காக புனே அனுப்பப்டும் என்றும், முடிவு தெரிந்தவுடன் அவர் சொந்த ஊருக்கு அனுப்பப்படுவார் என்றும் மருத்துவர் ரகுநந்தன் தெரிவித்திருக்கிறார்.

0 comments:
Post a Comment