Friday, August 8, 2014

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து சென்னை பாரி முனை , ஆட்சியாளர் அலுவலகம் முன்பு, அனைத்துகட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தினர்.
பாலஸ்தீனத்தின் காஸா மீது கடந்த ஒரு மாதத்திருக்கும் மேலாக இஸ்ரேல் கொடூர தாக்குதலை நடத்தி வருகிறது. இத்தாக்குதலில் பலியான அப்பாவிகள் எண்ணிக்கை இதுவரை 2000 ஐ தாண்டியுள்ளது. பாலஸ்தீனியர்கள் மீது நடத்தப்பட்டுவரும் இனப்படுகொலையை உடனடியாக தடுத்துநிறுத்தக்கோரியும், பாலஸ்தீன நாட்டை அங்கிகரிக்கும் தீர்மானத்தை ஐநா அவையில் கொண்டுவரக் கோரியும் SDPI தலைமையில்  அனைத்து கட்சிகளும் இணைந்து  சென்னை பாரி முனை , ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்தில் SDPI, நாம் தமிழர் கட்சி , மே 17 இயக்கம், INTJ, பாலச்சந்திரன் மாணவர் இயக்கம் உட்பட 23 கட்சிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்.

 

0 comments:

Post a Comment