அடிக்கடி குளிக்க நினைப்பது சிலரின் இயல்பு. ஆனால் அப்படி அடிக்கடி குளிப்பது நல்லதா? விடை இதோ…கோடை காலத்தில் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். இப்பருவத்தில் வீசும் காற்று, தூசி தும்புகளை அள்ளிவந்து நமது சருமத்தைத் தாக்குகிறது. எனவே `சென்சிட்டிவ் ஸ்கின்’ கொண்டவர்கள் அரிப்பு, எரிச்சல், வீக்கத்தை அனுபவிக்க நேரலாம். ஈரப்பதம் மிக்க பகுதிகளில் கோடை காலத்தில் பூஞ்சை தாக்குதலும் ஏற்படும். அது பரு, கொப்புள பாதிப்பை ஏற்படுத்தலாம்.
சரி, இவற்றையெல்லாமë தவிர்க்கலாம் என்று அடிக்கடி குளிப்பதும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்கிறார்கள், மருத்துவர்கள்.
இது குறித்து தோல் சிகிச்சை நிபுணர் நீனா கூறும்போது, “நீங்கள் குளிக்கும்போது, சரு மத்தின் பாதுகாப்புப் படலம் அதன் ஈரப்பதத்தை இழக்கிறது. அந்தப் பாதுகாப்புப் படலம் இல்லாததால் நீங்கள் வீட்டுக்கு வெளியே செல்லும்போது வெயிலும், கிருமிகளும் மேலும் தீவிரமாகத் தாக்குகின்றன” என்கிறார்.
அப்போது சருமமானது புறஊதாக் கதிர்களால் தாக்கப்படும் அபாயத்தால், உலர்தன்மை, கொப்புளம் அல்லது ஒவ்வாமை ஏற்படலாம். “உலர்ந்த சருமம் கொண்ட வர்கள் கோடை காலத்தில் அடிக்கடி குளிப்பது நிலை மையை மேலும் மோச மாக்கவே செய்யும் என்பதை உணர்வதில்லை” என்கிறார் மற்றொரு சரும நிபுணரான ரிஷி.
தண்ணீரை சாதாரணமாக முகத்தில் அடித்துக் கொள் வது ஒன்றும் சருமத்தை ஆரோக்கியமாக வைக்காது. முகத்தை முறையாக சுத்தப் படுத்துவது அவசியம் என்பது மருத்துவர்கள் கருத்து. தோலின் இயற்கையான ஈரப்பதம் மாறாமல் பாதுகாக்க வேண்டும். ஒரு நாளைக்கு மூன்று முறை முகத்தைக் கழு வினால் போதும் என்று அவர்கள் தெரிவிக் கின்றனர்.
“நீங்கள் முகத்தைக் கழுவிய பின்போ, குளித்த பின்போ உடனே `மாய்சரைசர்’ போட வேண் டும்” என்கிறார் சரும மருத்துவர் மாத்னானி. “அது, சருமத்தின் இயற்கை ஈரம் பாதுகாப்புப் படலமாகத் தொடர வழிவகுக்கும். இல்லாவிட் டால் தோலில் இருந்து ஈரப்பதம் மூன்று நிமிடங்களில் உலர்ந்துவிடும்” என்று அவர் கூறுகிறார்.
உலர்ந்த அல்லது `சென்சிட்டிவ்’ சருமம் கொண்டவர்கள் மிதமான, நுரையில்லாத `கிளென் சர்களை’ பயன்படுத்த வேண்டும் என்பது மாத்னானி கொடுக்கும் கூடுதல் `டிப்ஸ்’. `கிளென்சர்கள்’ சருமத்தைச் சுத்தம் செய்யும், ஆனால் அதன் இயற்கை எண்ணைப் படலத்தை அகற்றிவிடாது.
உலர்ந்த சருமத்துக்குப் பகல் வேளையில் இலேசான கிரீமுடன் கூடிய மாய்சரைசரையும், இரவில் அதற்கேற்ற மாய்சரைசரையும் பயன்படுத்த வேண்டும். ஈரப்பதமான சூழலாக இருந்தால் `கிளென்சிங்’ போல `மாய்சரைசிங்’ முக்கியமில்லை என்று மாத்னானி தெரிவிக்கிறார்.
“உதடுகளை ஈரப்படுத்திக்கொள்வதற்கு நாவால் வருடக் கூடாது. நாக்கு உலர்ந்திருப்பதாக உணரும்போது தண்ணீர் பருகும்போது அப்படியே உதட்டையும் ஈரப்படுத்திக்கொள்ளுங்கள். பின்னர் `வாசலின்’ போன்றவற்றைப் பூசிக்கொள்ளுங்கள்.
உதடுகள் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டால் இரவில் வெண்ணை அல்லது நெய்யை உதட்டில் பூசிக்கொள்ளுங்கள். உதட்டில் பிளவு ஏற்பட்டால் பன்னீருடன் கிளிசரின் கலந்தோ, கற்றாழைச் சாறோ, `ஆன்டிசெப்டிக் கிரீமோ’ பூசிக்கொள்ளுங்கள்” என்று யோசனை கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.
கிருபா-தமிழ் எங்கள் உயிர்

0 comments:
Post a Comment