![]() |
| புகைப்படம் - பைஜுர் ரஹ்மான |
தற்போது தொடர் விடுமுறை வருகிறது. நம்ம ஊரு பேங்குக்கு நீங்கள் காலையில் பணம் எடுக்க போனால் பணம் எடுத்து வர மதியம் 1 மணி ஆகிறது. தற்போது பக்ரீத் பண்டிகை வேறு வருகிறது.எனவே உங்களுக்கு தேவையான பணத்தை இன்று முதல் சனிக்கிழமைக்குள் (செப்டம்பர் 24 முதல் 27 வரை ) எடுத்து வைத்து கொள்ளுங்கள். A.T.M. நம்பி இருக்காதீர்கள். மற்றும் வங்கி சம்மந்தப்பட்ட அனைத்து வேலையும் இந்த வாரத்துக்குள் முடித்து கொள்ளுங்கள்... சகோதரர்களே...
நாடு முழுவதும் பொதுத் துறை மற்றும் தனியார் வங்கிகள் என 28 வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகள் மூலம் தமிழகத்தில் மட்டும் தினந்தோறும் 8 லட்சம் காசோலைகள் பணமாக்கப்படுகின்றன. இது போக ஏ.டி.எம். மூலம், 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் பணம் எடுப்பவர்கள் உள்ளனர்.இதனிடையே வங்கிகளுக்கு வரும் 30ம் தேதி முதல், அக்., 5ம் தேதி வரை, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது.
செப்., 30, அக்., 1ம் தேதி வங்கிகளின் அரையாண்டு கணக்குகளை முடிக்கும் பணி; பண பரிவர்த்தனை இருக்காது.
அக்., 2ம் தேதி காந்தி ஜெயந்தி விடுமுறை.
அக்., 3ம் தேதி தசரா விடுமுறை.
அக்., 4ம் தேதி சனிக்கிழமை; வங்கிகள் அரை நாள் தான் இயங்கும்.
அக்., 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, வார விடுமுறை.
அக்., 6ம் தேதி பக்ரீத் விடுமுறை.
இம்மாதம், 29ம் தேதிக்குப் பின், அக்., 7ம் தேதி தான், வங்கிகள் முழுமையாக இயங்கும். எனவே, வரும் 29ம் தேதி அன்றே வங்கிப் பரிவர்த்தனைகளை முடித்துக் கொள்ளுமாறு வணிகர்கள் உள்ளிட்டோரை எச்சரிக்கை செய்யும் குறுஞ்செய்திகள் நாடு முழுவதும் அனுப்பப் படுகின்றன.
இப்படி தொடர் விடுமுறை வருவதால், காசோலைகளை பணமாக்குவது முடங்கும். ஏ.டி.எம்., மூலம் பணம் எடுக்க, அவற்றில், நாள்தோறும் பணம் நிரப்ப வேண்டும்.தொடர் விடுமுறை வந்தால், ஏ.டி.எம்., மூலம் பணம் எடுப்பதும் நின்றுவிடும்.ஒரு வார காலத்துக்கு, எந்தப் பண பரிவர்த்தனையும் நடக்காது. இதனால், வணிகம் மற்றும் பிற பயன்பாடுகளுக்கான பணம் இல்லாமல் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் என, அச்சம் எழுந்துள்ளது.
இது குறித்து வங்கித் துறை வட்டாரங்கள் ”தொடர் விடுமுறை என்பது அதிகபட்சம், மூன்று நாள்களுக்குத் தான் இருக்கும்.
அரையாண்டு கணக்கு முடிப்பதற்காக செப்., 30ம் தேதி விடுமுறை என்றால் அக்., 1ம் தேதி வங்கி இயங்கும். அக். 1ம் தேதி விடுமுறை என்றால் செப்., 30ம் தேதி வங்கி இயங்கும். இது ஒவ்வொரு வங்கியைப் பொறுத்து மாறுபடும்.அக். 2 மற்றும் 3ம் தேதி விடுமுறை. 4ம் தேதி சனிக்கிழமை வங்கி அரை நாள் இயங்கும்.தமிழகத்தைப் பொறுத்தவரை பக்ரீத்துக்கு 5ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை. எனவே பக்ரீத்துக்கு என தனியாக விடுமுறை இல்லை. எனவே 6ம் தேதி வழக்கம் போல் வங்கிகள் இயங்கும்.நாடெங்கும் இணையதள வங்கி மொபைல் வங்கி முறைகள் நடைமுறைக்கு வந்தபின் வங்கிக்கு வந்து பரிவர்த்தனை செய்யும் பணிகள் 40 சதவீதத்துக்கு மேல் குறைந்துவிட்டன. காசோலை பரிவர்த்தனை மட்டுமே வங்கிகளுக்கு வருகின்றன. 20 ஆயிரம் ரூபாய்க்கு கீழ் பணம் எடுப்பவர்களுக்கு ஏ.டி.எம்., வசதி உள்ளது.எனவே தமிழகத்தைப் பொறுத்தவரை வங்கிகளுக்கு தொடர்ச்சியாக இரண்டு நாள்கள் தான் விடுமுறை. இதனால், ஏ.டி.எம். சேவை பாதிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் முற்றிலுமாக வங்கி சேவை முடங்கி விடாது.” என்கிறார்கள்.

0 comments:
Post a Comment